புதிய குற்றவியல் நடைமுறை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி மனித சங்கிலி

புதிய குற்றவியல் நடைமுறை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி மனித சங்கிலி
JAAC ன் திருவண்ணாமலை பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்தபடி தொடர் அறப்போராட்டமாக இன்று மத்திய அரசு புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைத்து திரும்ப பெற வேண்டும் என்று கோரி தமிழ்நாடு மாநில அளவில் அனைத்து நீதிமன்றங்கள் வாயில் முன்பாக அனைவரையும் ஒருங்கிணைத்து மனித சங்கிலி போராட்டம்நடத்துவது எல்லாம் முடிவு செய்தபடி திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன் வழக்கறிஞர்கள் மனித பங்களிப் போராட்டம் செய்தனர் நீதிமன்றத்தை புறக்கணிப்பு செய்வது என ஜாக் கூட்டு குழு பொதுக்குழுவில் அறிவித்தபடி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பாக இன்று வழக்கறிஞர்கள் தமிழகம் முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்தனர் இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நீதிமன்ற வளாகத்தின் முன்பு வழக்கறிஞர்கள் மனித சங்கிலி அமைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து வழக்கறிஞர் சேகரன் கூறும்போது ஒன்றிய அரசு அறிவித்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது இந்த சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்று கூறினார் இந்த போராட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்
Next Story