திருப்பூரில் தமிழகக வெற்றிக் கழகத்தின் கொடிகம்பம் அமைக்க அனுமதி தராமல் தங்களை அலைக்கழிப்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மாநகர காவல் ஆணையரிடம் மனு!

திருப்பூரில் தமிழகக வெற்றிக் கழகத்தின் கொடிகம்பம் அமைக்க அனுமதி தராமல் தங்களை அலைக்கழிப்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மாநகர காவல் ஆணையரிடம் மனு!
திருப்பூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிகம்பம் அமைக்க அனுமதி தராமல் தங்களை அலைக்கழிப்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி தராமல் தங்களை அலைக்கழிப்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர் அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்,  அக்கட்சியின் கொடியினை அறிமுகம் செய்து வைத்தார் அப்போது அவர் உரிய அனுமதி பெற்று நம் கொடியை பறக்க விடுங்கள் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் திருப்பூர் பகுதிகளில் கொடிக்கம்பம் அமைத்து கட்சிக் கொடியினை ஏற்றிட காவல்துறையினர் தடை விதிப்பதாகவும் அனுமதி பெற மாநகராட்சி நிர்வாகத்தை அணுகினால் காவல்துறையிடம் அனுமதி பெறுமாறு அனுப்பி விடுவதாகவும்,  காவல்துறையினரிடம் அணுகினால் மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும் என தங்களை அலைக்கழிப்பதாகவும் குற்றம் சாட்டிய அவர்கள் , தங்கள் கோரிக்கை தொடர்பாக, மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளிக்க முடிவெடுத்து ,  முதல் கட்டமாக மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்திருப்பதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்
Next Story