மங்கலம்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

மங்கலம்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
தாய் சொத்தை வேறு ஒருவருக்கு விற்றதால் ஆத்திரம்
விருத்தாசலம் அடுத்த மந்தாரக்குப்பம் ஜெயப்பிரியா அலுவலகம் பின்புறம் வசிப்பவர் மணி மகள் மேரிபா மணி (36), இவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகிய நிலையில் மணவா ஜாய் (15) என்ற மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இவரது தாய் விஜய சாமுண்டீஸ்வரி என்பவர் அவரது பெயரில் ஏ. சாத்தனூர் கிராமத்தில் உள்ள 5 சென்ட் இடத்தினை அதே ஊரை சேர்ந்த பெண் ஒருவருக்கு விற்பனை செய்து அதனை மங்கலம்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொடுத்ததை கண்டித்து தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும், சார்பதிவாளருக்கும் சம்மன் அனுப்பி உள்ளதாகவும் வழக்கு நிலுவையில் உள்ள போது மேற்படி இடத்தினை சார் பதிவாளர் பதிவு செய்து கொடுத்ததை கண்டித்து மேரிபா மணி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடன் தகவல் கிடைத்து விரைந்து சென்ற மங்கலம்பேட்டை போலீசார் அவரது மீது தண்ணீரை ஊற்றி அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர் இச் சம்பவத்தால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story