விருத்தாசலத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் ஓய்வு சத்துணவு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் ஓய்வு சத்துணவு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நடந்தது
விருத்தாசலம் பாலக்கரையில் தமிழ்நாடு அரசு பணி ஓய்வு சத்துணவு பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநிலத் துணைத் தலைவர் நேரு தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் கணேசன், கண்ணகி, ராஜேந்திரன், வீரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஒன்றிய செயலாளர் குணசேகரன் வரவேற்றார். மாநில தலைவர் விஜய பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மங்களூர் ஊராட்சி ஒன்றியம் திட்டக்குடி அரசினர் பெண்கள் மேல்நிலை சத்துணவு மையத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள கொளஞ்சிநாதன் என்பவருக்கு மாத ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு மேலாளர் பணி நிலை உயர்வு பெற்று சத்துணவு பணியாளர் இடம் மாறுதலில் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு பணம் வசுலிப்பதையும், சமையல் பாத்திரம் வழங்க பணம் வசூலிப்பதையும், உணவு பாதுகாப்பு துறை அனுமதி பெறுவதற்கு பணம் வசூலிப்பதை கண்டித்தும், முறைகேடாக 10 லட்சத்திற்கு மேல் சத்துணவு பணியாளர்களிடம் பணம் பறித்துள்ள சம்பவத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி பணத்தை ஒப்படைக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி அகவிலை படியுடன் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர் உயிர் நீப்பின் குடும்ப ஓய்வூதியம் மற்றும் ஈமச்சடங்கு நிதி வழங்கிட வேண்டும். ஓய்வு பெற்றுள்ள பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகம் சென்று மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். முடிவில் மாவட்ட செயற்குழு கணேசன் நன்றி கூறினார்.
Next Story