விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்

விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்
குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நடந்தது
விருத்தாசலம் நீதிமன்றம் முன்பு மூன்று குற்றவியல் சட்டங்களை மாற்றி அமைத்ததை கண்டித்தும், திரும்ப பெற வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. அட்வகேட் அசோசியேசன் சங்கத் தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ், ஜாக் பொறுப்பாளர்கள் மூத்த வழக்கறிஞர் ராஜு, புஷ்ப தேவன், ஜெயபிரகாஷ், செல்வபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து இந்திய தண்டனை சட்டங்களை மாற்றி அமைத்ததை கண்டித்தும், மாற்றி அமைக்கப்பட்ட மூன்று சட்டங்களையும் திரும்ப கொண்டு வர வலியுறுத்தியும் ஒரு நாள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு செய்து கண்டன கோஷங்கள் எழுப்பியதுடன் நீதிமன்ற வளாகம் முன்பு விருத்தாசலம்-சேலம் நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒருவரை ஒருவர் கைகோர்த்த படி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வழக்கறிஞர்கள் ஆனந்த கண்ணன், காசி விஸ்வநாதன், ராம செந்தில், குமரகுரு, சம்பத், அசோக்குமார், பெண் வழக்கறிஞர்கள் ஜென்னி, காயத்ரி, ஜோதிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story