திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு முகாம்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு  முகாம்
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு முகாமில் பெறப்பட்ட 50 புகார் மனுமீது நடவடிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு முகாமில் பெறப்பட்ட 50 புகார் மனுமீது நடவடிக்கை திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ஷ்ரேயா குப்தா தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமில் கருத்து கேட்பு குழு பிரிவிலிருந்து பெறப்பட்ட திருப்தி அடையாத 09 மனுதாரர்களை நேரில் அழைத்து அவர்களின் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காரணம் கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள். புதிதாக 50 புகார் மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களிடம் நேரடியாக பெற்றுக்கொண்டார்கள். மேலும் வாரந்தோறும் புதன்கிழமைகளில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும். இக்கூட்டத்தில் மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம். என்பதை மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்தனர்
Next Story