புலியூர் செக்போஸ்ட் அருகே நடந்து சென்ற முதியவர் மீது வேகமாக வந்த பயணிகள் ஆட்டோ மோதி விபத்து. முதியவர் படுகாயம்.

புலியூர் செக்போஸ்ட் அருகே நடந்து சென்ற முதியவர் மீது வேகமாக வந்த பயணிகள் ஆட்டோ மோதி விபத்து. முதியவர் படுகாயம்.
புலியூர் செக்போஸ்ட் அருகே நடந்து சென்ற முதியவர் மீது வேகமாக வந்த பயணிகள் ஆட்டோ மோதி விபத்து. முதியவர் படுகாயம். கரூர் மாவட்டம், வெங்கமேடு அருகே உள்ள நடுகுளத்து பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் வயது 65. இவர் ஆகஸ்ட் 27ஆம் தேதி இரவு 7:30-மணி அளவில், கரூர் - திருச்சி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புலியூர் செக்போஸ்ட் முன்பு சாலையைக் கடந்து நடந்த சென்றபோது, அவ்வழியாக கரூர் சின்ன ஆண்டான் கோயில், திருப்பதி லேஅவுட் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணி என்பவர் ஓட்டி வந்த பயணிகள் ஆட்டோ சாலையைக் கடக்க முயன்ற செல்வம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறி செல்வம் கீழே விழுந்ததில் அவருக்கு பின்னந்தலையில் பலத்த காயம்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக செல்வத்தின் மருமகள் சுருதி வயது 34 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பயணிகள் ஆட்டோவை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய மணி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.
Next Story