பேருந்து நிலையம் சம்பந்தமாக நகராட்சி துறையின் இணை இயக்குனர் அவர்களை இராசிபுரம் மக்கள் நலக்குழுவின் சார்பில் தலைமை நிர்வாகிகள் சந்தித்து மனு
Rasipuram King 24x7 |28 Aug 2024 1:17 PM GMT
பேருந்து நிலையம் சம்பந்தமாக நகராட்சி துறையின் இணை இயக்குனர் அவர்களை இராசிபுரம் மக்கள் நலக்குழுவின் சார்பில் தலைமை நிர்வாகிகள் சந்தித்து மனு
நகராட்சியின் இணை இயக்குனர் இராசிபுரம் வருகை இராசிபுரம் மக்கள் நலக்குழு தலைமை நிர்வாகிகள் சந்தித்து மனு வழங்கினர். நகராட்சி துறையின் இணை இயக்குனர் சந்திரசேகர் அவர்கள் ,மண்டல இணை இயக்குநர் அசோக் குமார் ஆகியோர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்திற்கு ஆய்விற்காக வருகை புரிந்த நிலையில் இராசிபுரம் மக்கள் நலக்குழுவின் சார்பில் தலைமை நிர்வாகிகள் சந்தித்தனர். இராசிபுரம் புதிய பேருந்து நிலைய இடமாற்றம் தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும், அணைப்பாளையம் ஏரிக்கு அருகில் ராசிபுரம் பேருந்து நிலையம் கொண்டு செல்லப்பட்டால் நகரில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பட போகும் கஷ்டத்தை விவரித்து எடுத்து கூறினார்கள். மேலும் ராசிபுரம் நகராட்சிக்கு நிரந்தர ஆணையாளர் மற்றும் பொறியாளர் இல்லாமலும் இருப்பதால் குடிநீர் ,தெரு விளக்கு, சுகாதாரம் போன்ற அடிப்படை பிரச்சனைகளை பொதுமக்கள் அதிகாரியிடம் முறையிட முடியவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினர். அவர்களது கோரிக்கையை பொறுமையாக கேட்டறிந்த இணை இயக்குனர் அவர்கள் நகராட்சி மன்ற தீர்மானம் பற்றி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தான் யாதொரு முடிவு எடுக்க இயலும் அவரிடம் மீண்டும் முறையிடவும்,இன்னும் 15 நாட்களில் ராசிபுரம் நகராட்சிக்கு ஆணையாளர் முறையாக நியமிக்கப்படுவார் என்பதையும் தெரிவித்தார்கள். இந்நிகழ்வில் மண்டல இயக்குனர் அவர்களும், இராசிபுரம் நகர் மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர் கவிதா சங்கர் அவர்களும் உடன் இருந்தனர். மேலும் இந்நிகழ்வில் இராசிபுரம் மக்கள் நல குழுவின் தலைவர் முன்னாள் கவுன்சிலர் வி.பாலு, செயலாளர் நல்வினை செல்வன், கௌரவத் தலைவர் ஜெயபிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் ஜெ.சபீர், குடிநீர் பிரிவு பொறுப்பாளர் ஆர் டி தர்மராஜ், சட்ட பாதுகாப்பு குழு பொறுப்பாளர் வழக்கறிஞர் பாச்சல் சீனிவாசன், துணைத் தலைவர் துரைசாமி, துணைச் செயலாளர் பவர் மஸ்தான், கல்வி குழுப் பொறுப்பாளர் மோகன்தாஸ் மற்றும் கபிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story