திடுமல் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா தீர்த்தகுட ஊர்வலம்.
Paramathi Velur King 24x7 |28 Aug 2024 1:25 PM GMT
பரமத்தி வேலூர் வட்டம் திடுமல் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா தீர்த்தகுட ஊர்வலம்.
பரமத்தி வேலூர்,ஆக.28:- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் கபிலர்மலை அருகே உள்ள திருமல் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெருகிறது. விழாவை முன்னிட்டு இன்று தீர்த்தக்குடம் எடுத்துவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களில் புனித நீர் நிரப்பு அதற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து யானை,குதிரை உடன் 500-க்கும் மேற்பட்டோர் தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். 29 ஆம் தேதி மங்கல இணை,விநாயகர் வழிபாடு,புண்யாகம்,விசேஷ சாந்தி,பூர்ணாகுதி,இரண்டாம் கால யாக பூஜை ஆகியவை நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு மேல் கோபுர கலசம் வைத்தல்,அஷ்டபந்தனம் (மருந்து சாற்றுதல்) நடைபெறுகிறது.
Next Story