அங்காளம்மன், பெரியாண்டிச்சி, கருப்பண்ணார் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

குமாரபாளையம் அருகே அங்காளம்மன், பெரியாண்டிச்சி, கருப்பண்ணார் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையம் அல்லிநாயக்கன்பாளையத்தில் அங்காளம்மன், பெரியாண்டிச்சி, கருப்பண்ணார் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. ஆக. 19ல் முகூர்த்தக்கால் நடுதலுடன் விழா துவங்கியது. நேற்றுமுன்தினம் கணபதி யாகம் நடத்தப்பட்டு காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, நேற்று காலை 09:00 மணியளவில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினார்கள். அங்காளம்மன், பெரியாண்டிச்சி, கருப்பண்ணார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. யாகசாலை பூஜைகளை சிவஸ்ரீ செந்தில் முருகசிவம், தமிழ்ராஜ், ராஜ வெங்கடேச சிவம் குழுவினர் நடத்தினர். 12 நாட்களுக்கு தினமும் மண்டல பூஜைகள் நடைபெறவுள்ளது.
Next Story