நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு கூட்டம்

அரியலூர் பெரம்பலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் குற்ற வழக்குகள் குறித்து திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் மனோகர் ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் மனோகர் ஆய்வு செய்தார் பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் குற்ற வழக்குகள் குறித்து திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் மனோகர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் காவல்துறை துணைத் தலைவர் மாவட்ட காவல் அலுவலகத்தையும், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் (GCR) வழக்கு தொடர்பாக ஆய்வு செய்தும், வழக்கமான குற்றவாளிகள் தொடர்பாக கேட்டறிந்தும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது தொடர்பாகவும் நீதிமன்ற பிடி ஆணைகளை நிறைவேற்றுவது தொடர்பாகவும், குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பது தொடர்பாகவும் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி ஆலோசனை வழங்கினார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதார் பசேரா அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
Next Story