பொன்னி மெடிக்கல் சென்டர் சார்பில் விழிப்புணர்வு முகாம்.
Paramathi Velur King 24x7 |28 Aug 2024 8:26 PM ISTபரமத்தி வேலூர் பொன்னி மெடிக்கல் சென்டர் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்,ஆக.28:- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பொன்னி மெடிக்கல் சென்டர் சார்பில் அவசர சிகிச்சை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பொன்னி மெடிக்கல் சென்டர் மருத்துவர் அரவிந்தன் முன்னிலை வகித்தார். முகாமிற்கு சேலம் விநாயகா மிஷன் அவசர சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் அசோக் ராஜமாணிக்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவசர சிகிச்சை பிரிவில் உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் ஆகியோர் ஆபத்தில் இருப்பவர்களுக்கு எவ்வாறு முதல்வர் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வருவது குறித்தும் அதற்கான மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வைத்து மருத்துவர், செவிலியர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர் ஏற்படுத்தினார். மேலும் இம்முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு ஆபத்தில் இருப்பவர்களுக்கு எவ்வாறு இருப்பவர்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Next Story


