அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்
Dindigul King 24x7 |28 Aug 2024 3:46 PM GMT
பழனி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பெண்கள் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
திண்டுக்கல் மாவட்டம் பழனி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சுக்கமநாயக்கன்பட்டி ,சமத்துவபுரத்தில் குடிநீர் வசதி, மயானம், பஸ் வசதி செய்துதர வேண்டும். அதேபோல் தொப்பம்பட்டி ஒன்றிய கிராம பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும்,வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தவர்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். இதனிடையே ஆர்ப்பாட்டத்தின்போது ஏராளமான பெண்கள் காலிக்குடங்களுடன் வந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொப்பம்பட்டி ஒன்றியக்குழு சார்பில், பழனி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Next Story