தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் முதல் ஒன்றிய பேரவை நிகழ்ச்சி.
Maduranthakam King 24x7 |28 Aug 2024 4:07 PM GMT
தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் முதல் ஒன்றிய பேரவை நிகழ்ச்சி.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் முதல் ஒன்றிய பேரவை நிகழ்ச்சி அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் சி.ஆறுவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்பாளர் பானு வரவேற்புரை வழங்கினார். ஒன்றிய பொறுப்பாளர்கள் கிருஷ்ணன் இளமணி முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் க.பக்கிரி துவக்க உரை மற்றும் வாழ்த்துரை வி.சேகர் டி.பிரான்சிஸ் வழங்கினர். இந்நிகழ்வில் சென்னையில் நடைபெற்ற சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு சால்வை அணிவித்து கௌரிக்கப்பட்டது. முன்னதாக இக்கூட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 6,750 அகவிலை படியுடன் வழங்கிட வேண்டும், குடும்ப ஓய்வூதியம் வழங்கிட ஈமாகிரியை செலவு நிதி ரூபாய் 25,000 வழங்கவும், இலவச பஸ் பாஸ் வழங்கவும், காசில்லா மருத்துவ காப்பீடு வழங்கிடவும் கோரிக்கைகள் வெற்றி பெற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் திரளாக கலந்து கொண்டு ஒன்றிய பேரவை வெற்றி பெற கோரிக்கை வைத்தனர்.மேலும் குறிப்பாக மாநில துணை பொதுச் செயலாளர் பி.எல்.சுப்பிரமணியம் அவர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைத்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற பேச்சுவார்த்தை செய்யப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் தாமஸ், இளங்கோவன், ஒன்றிய செயலாளர் ஏ.கே.சுப்பிரமணி, சித்ரா மாவட்ட செயலாளர் சா.காமராஜ், மாவட்ட பொருளாளர் பி.வி.ராமமூர்த்தி மாவட்ட இணை செயலாளர் இ.தினகரன் மாவட்டத் துணைத் தலைவர்கள் கே .சசிரேகா வி.கீதா மாவட்ட இணை செயலாளர் என்.தேவி வி.செல்லம்மாள் உள்ளிட்ட தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..
Next Story