நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலை நிர்வாக குழு கூட்டம்
Thoothukudi King 24x7 |28 Aug 2024 4:12 PM GMT
தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலை நிர்வாக குழு கூட்டம் தலைவர் எல்.எட்வின் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் பத்து ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய தலைவர் எட்வின் பாண்டியனுக்கு உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர்
தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலை நிர்வாக குழு கூட்டம் தலைவர் எல்.எட்வின் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் பத்து ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய தலைவர் எட்வின் பாண்டியனுக்கு உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலை நிர்வாக சபை கூட்டம் அலுவலகத்தில் 24-8-24 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். மேலாளர் கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலையின் தலைவர் எல் எட்வின் பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலை வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். இதைத்தொடர்ந்து கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இது தொடர்ந்து உறுப்பினர்கள் மாவட்ட நுகர்வோர் பண்டக சாலை மிகுந்த கடனில் இருந்ததை மீட்டு தற்போது லாபகரமாக கொண்டு கொண்டு வந்துள்ளார் மேலும் 10 ஆண்டு காலமாக சிறப்பாக பணியாற்றிய தலைவர் எட்வின் பாண்டியனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் தெரிவித்தனர் இந்த கூட்டத்தில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்க இயக்குனர்கள் சசிகுமார், ராஜேந்திரன், கார்த்திக், பரதேசி, தாசன், விஜிலியா, புஷ்பராணி, விஜயலட்சுமி, டெல்சி, ஜாக்லின், விஜயா,ஜானகி, ஈஸ்வரி, சுப்புலட்சுமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story