சங்ககிரி அருகே விநாயகர் சிலை தயாரிப்பு நிலையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு....

சங்ககிரி அருகே விநாயகர் சிலை தயாரிப்பு நிலையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு....
சங்ககிரி: விநாயகர் சிலை தயாரிப்பு நிலையங்களில் அதிகாரிகள் திடீர ஆய்வு...
சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் விநாயகர் சிலை தயாரிப்பு நிலையங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.... விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் சிற்பக்கலைக்கூடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு மற்றும் வர்ணம் பூசும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் உள்ள விநாயகர் சிலை தயாரிப்பு நிலையங்களில் தயாரிக்கப்படும் சிலைகள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது. இதில் விநாயகர் சதுர்த்தி சிலைகளுக்கு அடிக்கும் வர்ணங்கள் தண்ணீரில் கரையும் பொழுது எவ்வாறு கரைகிறது. தண்ணீர் மாசு அடையாமல் இருக்க சிலை தயாரிப்பாளர்கள் வர்ணங்கள் எவ்வாறு பயன்படுத்தி வருகின்றன என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள காவேரிப்பட்டி ஊராட்சி மேட்டூர், பகுதியில் உள்ள சிற்பக்கடல் விநாயகர் சிலை தயாரிப்பு நிலையங்களில் மாவட்ட சுற்றுச்சூழல் உதவி பொறியாளர்கள் சுமித்ராபாய், அஜய்கோகுல் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் லோகநாயகி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் விநாயகர் சிலை தயாரிப்பு நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விநாயகர் சிலை தயாரிப்பு எந்தெந்த மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சிலைகள் தண்ணீரில் எழுதிய கரையக்கூடியதா தண்ணீர் மாசுபடாமல் இருப்பதற்கான வர்ணங்களை விநாயகர் சிலைகளுக்கு அடிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தனர். மேலும் தமிழக அரசு 10 அடிக்கு மேல் இருக்கும் சிலைகளை விற்பனைக்கு அனுமதிக்கப்படாது எனவும் வருவாய் துறை அதிகாரிகள் அளவீடு செய்து 10 அடிக்கு மேல் உள்ள விநாயகர் சிலைகளின் உயரங்களை குறைத்து கிரீடம் மற்றும் சிலைகளுக்கு அடிப்பகுதியில் உள்ள கட்டைகளின் உயரத்தை குறைத்து விற்பனை செய்யும் படியும் சிலை தயாரிப்பு உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் அரசு அதிகாரிகள் 10 அடிக்கும் மேல் விநாயகர் சிலைகள் உயரம் இருக்கக் கூடாது என கடைசி நேரத்தில் கூறி வருவதாகவும் கோவை, ஈரோடு, சேலம் , நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களான கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆர்டரின் பேரில் செய்யப்பட்ட சிலைகள் வடிவமைகள் மாறும் சூழ்நிலை ஏற்படுவதாக விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த ஆய்வின்போது மாசு கட்டுப்பாட்டு துறை, வருவாய் துறை, காவல் துறை அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.
Next Story