விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தினால் மட்டுமே சிலை வைக்க அனுமதி அளிக்கப்படும்.
Arani King 24x7 |28 Aug 2024 6:05 PM GMT
ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
செப்டம்பர் மாதம் 7 ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற இருப்பதால் பல்வேறு இடங்களில் பல்வேறு வீதிகளில் ஆங்காங்கே விநாயகர் சிலைகளை வைத்து வழிபட ஏராளமான பக்தர்கள் தற்போது விநாயகர் சிலைகளை புக் செய்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவை பாதுகாப்புடன் சிறப்பாக பக்தர்கள் கொண்டாட காவல்துறை சார்பில் ஆண்டுதோறும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன்படி வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக பாதுகாப்புடன் பக்தர்கள் கொண்டாடும் விதமாக இன்று திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காவல் துணை கண்காணிப்பு ரஅலுவலகத்தில் ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நபர்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள விழா குழுவினர்கள் சிலைகளை அமைக்க காவல்துறையினர் அனுமதி பெற பல்வேறு பக்தர்கள் கலந்துகொண்டு காவல்துறையின் ஆலோசனைகளை பெற்றனர். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதற்கு அனுமதி கோரி வந்த பக்தர்களிடம் பேசிய ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன்.. ஆரணி கண்ணமங்கலம் களம்பூர் சந்தவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களிலும் நகரப்புறங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்க ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் உள்ளனர். அரசு விதிமுறைப்படி நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விநாயகர் சிலை வைக்கும் நபர்கள் 10 அடி உயரத்துக்கு மேல் சிலை வைக்க அனுமதி கிடையாது. சிலை வைக்கும் பகுதியில் தீயணைப்பு கருவிகள் நிச்சயமாக வைக்கப்பட வேண்டும். சிலை வைக்கும் இடங்களில் மேல் தகரம் கொண்ட பந்தல் அமைக்கப்பட வேண்டும். சிலைகள் மூன்று நாட்கள் மட்டுமே வைக்க அனுமதிக்கப்படுகிறது. சிலை வைக்கும் பகுதியில் கட்டாயமாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும். விநாயகர் சிலை அருகே 24 மணி நேரமும் குறைந்தபட்சம் ஐந்து பேர் விழா குழுவினர் சம்பவ இடத்தில் இருக்க வேணடும்.சிசிடிவி கேமரா வைத்தால் மட்டுமே விநாயகர் சிலை வைக்க அனுமதிக்கப்படும் என்று காவல்துறையினர் அறிவித்ததால் ஆரணியில் மட்டும் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொறுத்த இந்து முன்னணியினர் கேமராவிற்கு புக் செய்தனர். மேலும் ஆலோசனை கூட்டத்தில் ஆரணி கிராம நகர காவல் ஆய்வாளர்கள் விநாயகமூர்த்தி. ராஜாங்கம். உதவி ஆய்வாளர் சுந்தரேசன் கலந்து கொண்டனர்
Next Story