கரூரில் பயங்கரவாதம் குறித்து பயிற்சி வகுப்பு.ஹமீது உசேன் வாக்குமூலம்.
Karur King 24x7 |29 Aug 2024 2:45 AM GMT
கரூரில் பயங்கரவாதம் குறித்து பயிற்சி வகுப்பு.ஹமீது உசேன் வாக்குமூலம்.
கரூரில் பயங்கரவாதம் குறித்து பயிற்சி வகுப்பு.ஹமீது உசேன் வாக்குமூலம். "ஹிஸ்ப் உத் தஹ்ரீர்" என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பாக, சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த மெட்ரோ கெமிக்கல் இன்ஜினியர் ஹமீது உசேன், அவரின் தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் உள்ளிட்ட 6 பேரை என்.ஐ.ஏ.அதிகாரிகள் அண்மையில் கைது செய்தனர்.அவர்களை நேற்றுடன் 7-நாட்கள் காவலில் எடுத்தும் விசாரித்துள்ளனர். என்.ஐ.ஏ. அதிகாரிளிடம் ஹமீது உசேன் அளித்த வாக்குமூலத்தில் யூடியூப் சேனல் வாயிலாக கல்வி உதவித் தொகை வழங்குவதாக முஸ்லிம் இளைஞர்களுக்கு வலை விரித்ததாகவும், அவர்களுக்கு இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது பற்றி வகுப்பு எடுத்ததாகவும், வாரம் தோறும் ஞாயிறன்று சென்னை மற்றும் கரூரில் ரகசிய பயிற்சி மையத்தில் பயங்கரவாதம் குறித்து வகுப்பு எடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும், சென்னை அண்ணா பல்கலையில் கௌரவ பேராசிரியராக பணி ஆற்றியுள்ளதாகவும், அங்கு பயின்ற மாணவர்களை மூளைச்சலவை செய்ததாகவும், வெளியூர்களுக்கு சென்று ரகசிய கூட்டம் நடத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் ரகுமான், முஜிபுர் ரகுமான் ஆகியோர் தனது வலையில் சிக்கியதாகவும், இருவரையும் தஞ்சாவூர் திருச்சி மாவட்ட நிர்வாகிகளாக நியமித்ததாகவும், அவர்கள் கல்லூரிகளுக்கு சென்று விடுதி மாணவர்களை குறி வைத்து, பயங்கரவாத அமைப்பில் சேர்த்தனர்.எங்களது அமைப்பில் 50 பேர் உறுப்பினராக சேர்ந்தனர். அவர்களுக்கு 5- முறை பத்து பத்து நபர்களாக பிரித்து கேரளாவுக்கு அழைத்துச் சென்று, பயங்கரவாத பயிற்சி பெற ஏற்பாடு செய்ததாகவும், அவர்களுக்கு வெளிமாநிலங்களில் இருந்து வந்த"ஹிஸ்ப் உத் தஹ்ரீர்" அமைப்பைச் சேர்ந்தவர்கள் பயிற்சி அளித்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் ரகசியமாக பயங்கரவாத பயிற்சி அளித்த விவகாரம் அதிகாரிகள் மட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story