திறனாய்வு தேர்வு எழுத முடியாமல் மாணவர்கள் அவதி

திறனாய்வு தேர்வு எழுத முடியாமல் மாணவர்கள் அவதி
செம்பட்டி அருகே ஜெயினி கல்லூரியில் கம்ப்யூட்டர்கள் பழுதானதால் தேசிய திறனாய்வு தேர்வு எழுத முடியாமல் மாணவர்கள் அவதி எதிர்காலம் பாதிக்கப்படுவதாக மாணவர்கள் குற்றச்சாட்டு
தேசிய திறனாய்வு தேர்வுகள் நேற்று தமிழக முழுவதும் நடைபெற்றது இதில் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்துள்ள ஜெயினி கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் 60 மாணவர்கள் தேர்வு எழுத வந்திருந்த நிலையில் தேர்வு நேரமான பிற்பகல் 3 மணி முதல் ஆறு மணி வரை அனுமதிக்க பட்டிருந்தது. தேர்வு எழுத 43 மாணவர்கள் வந்ததில் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர்கள் அனைத்தும் பழுதாகி விட்டதாக கல்லூரி நிர்வாகம் மாணவர்களே காத்திருக்க வைத்துள்ளனர். மூன்று மணிக்கு தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் மாலை வரையில் 24 மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் கல்லூரி வளாகத்திலேயே காத்திருந்தனர். இது குறித்து மாணவர்கள் கூறும்போது மற்ற கல்லூரிகளில் தேர்வு எழுத வந்தவர்கள் தேர்வு எழுதி விட்டதாகவும் தங்களுக்கு தேர்வு நடந்த ஜெயின் கல்லூரியில் மட்டும் கம்ப்யூட்டர் பழுது எனக்கூறி தேர்வு எழுத முடியாமல் போனதாகவும் கல்லூரி நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்து தர மறுப்பதாகவும் குற்றம் சுமத்தினர். மேலும் இந்த தேர்வு எழுத முடியாததால் தங்களுடைய மேல்படிப்பு பாதிக்கப்படுவதாக கூறினர். பின்னர் தேர்வு முகவரிடம் பேசி மற்றொரு நாளில் தேர்வுக்கு அழைக்கப்படுபவர் என கூறியதன் பேரில் மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் தேர்வு மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கல்லூரி சார்பில் கேட்ட போது சிஸ்டம் லாகின் ஆகாததால் மாணவர்கள் தேர்வு எழுத முடியவில்லை என்று கூறினர்.
Next Story