கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி
Dharapuram King 24x7 |29 Aug 2024 3:28 AM GMT
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி தாராபுரத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கிராம பஞ்சாயத்து ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர் மயமாக்குதல் குறித்த பயிற்சி 2நாட்கள் நடைபெற்றது.தளவாய்பட்டினம்,தொப்பம்பட்டி,வீராட்சிமங்கலம் ,கவுண்டச்சிபுதூர்ஆகிய 4 ஊராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்றனர். கிராம ஊராட்சி பி.டி.ஓ சிவகுருநாதன் பயிற்சியை துவக்கிவைத்தார்.பவர் பாயிண்ட் மூலம் தெளிவான விளக்கங்களுடன் இந்த பயிற்சியை மாவட்ட பயிற்றுநர்கள் பிரவீன்குமார், பீலோமினா ஆகியோர் அளித்தனர். தொடர்ந்து கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்தில் மகாத்மா காந்தி தேசீய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் குறித்து வார்டு உறுப்பினர்களுக்கு களப்பயிற்சியளிக்கப்பட்டது .3அலகுகளுகாக(யூனிட்) நடைபெற்ற இப்பயிற்சியில முடிவில் வார்டு உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உத்தரவின் பேரில் இப்பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
Next Story