பவர்கிரிட் நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்காதால் ஆர்.டி.ஓ அலுவலகம் முற்றுகை
Dharapuram King 24x7 |29 Aug 2024 3:29 AM GMT
பவர்கிரிட் நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்காதால் ஆர்.டி.ஓ அலுவலகம் முற்றுகை
பவர்கிரிட் நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்காதால் ஆர்.டி.ஓ அலுவலகம் முற்றுகை காங்கேயம் தாலுகாவில் பவர்கிரிட் நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் நஷ்ட ஈடு தொகை வழங்காததால் ஆர்.டி.ஓ அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். காங்கேயம் தாலுக்கா சிவன்மலை காடையூர் ,நிழலி,சேனாபதி பாளையம் கிராமங்களில் இருந்து சுமார் 25க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் மத்திய அரசு நிறுவனமான பவர் கிரிட்டிற்கு நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது.ஆர்ஜிதம் செய்த நிலத்திற்கு பணிகள் 2022 ஆம் ஆண்டு முடிந்த பிறகும் நஷ்ட ஈடு தொகை வழங்கவில்லை. இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகளுடன் தாராபுரம் ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆர்டிஓ செந்தில் அரசனிடம் மனு அளித்தனர். தழிழ் நாடு மின் தொடரமைப்புக் கழகம் மின்பாதை அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இது வரை நஷ்டஈடு தொகை வழங்கவில்லை என கோரிக்கை வைத்தனர்.விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக ஆர்.டி.ஒ உறுதி கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.
Next Story