வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு: ஆட்சியர் தகவல்!

வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு: ஆட்சியர் தகவல்!
ஹெச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு: ஆட்சியர் தகவல் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, ஹெச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு படித்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "HCL Techbee "Early Career Programme” மூலமாக பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவருக்கு சிறு வயதிலேயே உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியினை துவங்க HCL Technologies-ல் ஒரு வருடகால பயிற்சி அளித்து நிரந்தர வேலைவாய்ப்புடன் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லுரியில் B.Sc (Computing Desigining) பட்டப்படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்தரா பல்கலைக்கழகத்தில் BCA பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைக்கழகத்தில் BCA/ BBA/B.Com., மற்றும் நாக்பூரிலுள்ள ஐஐஎம் பல்கலைக்கழகத்தில் Integrated Management பட்டப்படிப்புகளில் சேர்ந்து படித்திடவும் வாய்ப்பும் பெற்றுத் தரப்படும். இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணவ/மாணவிகளாக இருக்க வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பில் 2022-23 ஆம் ஆண்டுகளில் மொத்த மதிப்பெண்களில் 60 சதவீதம் மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் மொத்த மதிப்பெண்களில் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். HCL மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும் ஒரு வருட பயிற்சிக்கான செலவினம் தாட்கோவால் ஏற்கப்படும்.
Next Story