அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
கண்காட்சி
தச்சூரில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி நடந்தது. தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்பட தொகுப்பு கண்காட்சிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தச்சூர் ஊராட்சியில் அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட தொகுப்புகள் பொது மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது. அதில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள், அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்ற முக்கிய அரசு நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட புகைப்படங்கள் இடம் பெற்றது. இந்த புகைப்பட தொகுப்பினை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
Next Story