ஆண்டிபட்டி அருகே இரு சக்கரம் வாகனம் மோதி ஒருவர் பலி
Andippatti King 24x7 |29 Aug 2024 5:39 AM GMT
ஆண்டிபட்டி அருகே டி. ராஜகோபாலன்பட்டி விலக்கு அருகே சென்றபோது விபத்து ஏற்பட்டது
உசிலம்பட்டி அருகே கொசவபட்டியை சேர்ந்தவர் கேப்டன் 43, தனது மனைவி ஈஸ்வரி 35, என்பவரை இருசக்கர வாகனத்தின் பின்னால் உட்கார வைத்துக்கொண்டு ஆண்டிபட்டிஅருகே உறவினரின் இறப்பு நிகழ்வில் பங்கேற்க சென்றார்.ஆண்டிபட்டி அருகே டி. ராஜகோபாலன்பட்டி விலக்கு அருகே சென்றபோது டி.புதூரைச் சேர்ந்த சிவன்காளை என்பவர் ஒட்டிச் சென்ற இருசக்கர வாகனம் கேப்டன் சென்ற வாகனத்துடன் நேருக்கு நேராக மோதியது.கீழே விழுந்ததில் பின் தலையில் பலத்த காயம் அடைந்த ஈஸ்வரியை ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story