உடல் உறுப்பு தானம் செய்த மாணவருக்கு கலெக்டர் மரியாதை

உடல் உறுப்பு தானம் செய்த மாணவருக்கு கலெக்டர் மரியாதை
உடல் உறுப்பு தானம் செய்த மாணவருக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை
விளாம்பட்டியை சேர்ந்த இளையராஜா மகன் யோகேஸ்வரன் 13. இவர் விளாம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்தார். ஆக. 26ல் தனது பிறந்த நாளை முன்னிட்டு கோயிலுக்கு சென்றார். செம்மேடு பிரிவில் ரோட்டை கடக்க முயன்ற போது தனியார் பஸ் மோதியதில் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் மூளைச்சாவு அடைந்தார். அவரது பெற்றோர்களின் சம்மதத்துடன் உடல் உறுப்புக்கள் தானம் கொடுக்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசு சார்பாக கலெக்டர் பூங்கொடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, டி.எஸ்.பி., செந்தில்குமார் உட்பட பலர் இருந்தனர்.
Next Story