செங்கல்பட்டு முதன்மை மாவட்டஅமர்வு நீதிமன்றத்தில் திருமாவளவன்
Thiruporur King 24x7 |29 Aug 2024 7:07 AM GMT
செங்கல்பட்டு முதன்மை மாவட்டஅமர்வு நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நேரில் ஆஜரானார்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே காரணை கிராமத்தில், பஞ்சமி நிலம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் இறந்தவர்களுக்கு ஆண்டுதோறும் நினைவஞ்சலி கூட்டம் நடக்கும். கடந்த 2012ம் ஆண்டு, பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் இறந்தவர்களுக்கு நடந்த நினைவஞ்சலி கூட்டத்திற்கு, திருமாவளவன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தனியார் நிலம் வழியாக சென்றனர். அப்போது, தனியார் நிலத்தை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் கட்சியினர் சேதப்படுத்தியாக குற்றச்சாட்டு எழுந்தது . அதே பகுதியைச் சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி என்பவர், மாமல்லபுரம் காவல் நிலையத்தில், தன் நிலத்தை சேதப்படுத்தியதாக புகார் அளித்தார். இந்த புகாரையடுத்து, திருமாவளவன் உள்ளிட்ட, 14 பேர் மீது, வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு, செங்கல்பட்டு முதன்மை மாவட்ட அமர்வு குற்றவியல் நீதிமன்றத்தில், நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜராக வந்ததை தொடர்ந்து , ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
Next Story