மருநுாத்து மந்தை காளியம்மன் கோயில் பால்குட விழா

மருநுாத்து மந்தை காளியம்மன் கோயில் பால்குட விழா
மருநுாத்து மந்தை காளியம்மன் கோயில் பால்குட விழா
சாணார்பட்டி அருகே மருநுாத்து மந்தை காளியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இவ்விழாவையொட்டி ஆக.23 இரவு கும்மியாட்டம் நடந்தது. நேற்று முன்தினம் கிராம தெய்வங்களுக்கு கனி வைத்து வழிபாடு செய்ய தேவராட்டம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று பக்தர்கள் மாவிளக்கு, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பொங்கல் வைத்து ஆட்டுக் கிடா காணிக்கை கொடுத்து விருந்து படைக்கப்பட்டது.பின்னர் பால்,பன்னீர்,தேன்,இளநீர் போன்ற 11 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் ,தீபாராதனை நடைபெற்றது.
Next Story