சங்ககிரியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்....

சங்ககிரி: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.
சேலம் மாவட்டம் சங்ககிரியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தரக்குறைவாக பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து அதிமுக சார்பில் அண்ணாமலைக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பி உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு... அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக மாநில தலைவர் தரக்குறைவாக பேசியதை கண்டித்து அதிமுக சார்பில் சேலம் மாவட்டம் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே சங்ககிரி அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ரத்தினம் தலைமையில் 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆட்டுக்குட்டி அண்ணாமலையே எங்களது நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியயை தரக்குறைவாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் அரசியல் நாகரீகம் கற்று அறிந்து பேச வேண்டும் லண்டனுக்கு ஓடி ஒளிந்து கொண்டாய் என்றும் அண்ணாமலைக்கு எதிரான பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பியதோடு உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சங்ககிரி நகர செயலாளர் செல்வம் அரசிலாமணி நகர செயலாளர் காளியப்பன்,தேவூர் நகர செயலாளர் கிருஷ்ணன் அதிமுக கிழக்கு, மேற்கு நகர ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
Next Story