கிருஷ்ணர் வேடம் அணிந்த குழந்தைகளை தூக்கி மகிழ்ந்த அமைச்சர் கீதா ஜீவன்!
Thoothukudi King 24x7 |29 Aug 2024 8:31 AM GMT
தூத்துக்குடியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோகுல கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ணர் வேடம் அணிந்த குழந்தைகளை அமைச்சர் கீதா ஜீவன் கையில் தூக்கி முத்தமிட்டு மகிழ்ந்தார்.
கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 26ம்தேதி முதல் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் பங்களா தெரு பகுதியில் அமைந்துள்ள கோகுல கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ண வேடம் அணிந்து கிருஷ்ணரை வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு கிருஷ்ணர் வேடம் அணிந்த குழந்தைகளை கையில் தூக்கி வைத்து முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அந்த கிருஷ்ணன் வேடம் அணிந்த குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார். இது தொடர்ந்து கோகுல கிருஷ்ணர் மற்றும் பாண்டுரங்கனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திமுக வட்டச் செயலாளர் கங்கா ராஜேஷ், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
Next Story