இலவச வீட்டு மனை வழங்க வலியுறுத்தி சிபிஎம் போராட்டம்!

இலவச வீட்டு மனை வழங்க வலியுறுத்தி சிபிஎம் போராட்டம்!
தூத்துக்குடியில் ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வலியுறுத்தி சிபிஎம் சார்பில் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
திமுக ஆட்சிக்கு வந்தால் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா இலவச வீடுகள் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. ஆனால் 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை ஏழை, எளியோருக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் இலவச வீடுகள் வழங்கப்படவில்லை. வீட்டு வாடகை உயர்வு காரணமாக ஏராளமான ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து ஏழை எளிய வீடில்லாத பொதுமக்களுக்கு தமிழக அரசு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் இலவச வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர குழு சார்பில் மாநகரக்குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில் சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாநகர செயலாளர் முத்து, மாவட்டக்குழு காசி, இல இராமமூர்த்தி, காஸ்ட்ரோ ஸ்ரீநாத், ஆனந்த், ரவி தாகூர், சசிகுமார், நாகராஜ், பாலு, காந்திமதி, டாக்டர் சிவனாகரன், நாகராஜ், டென்சிங்,கிஷோர், எஸ்எச்ஐ பெருமாள், தங்கவேல், முத்துகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story