உண்ணாவிரதத்தில் பங்கேற்க துாய்மை பணியாளர்கள் முடிவு
Alangudi King 24x7 |29 Aug 2024 9:32 AM GMT
உண்ணாவிரதத்தில் பங்கேற்க துாய்மை பணியாளர்கள் முடிவு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துாய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் ஆலோசனை கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது. சங்கத்தின் மாநில துணைத் தலைவர் திரவியராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துாய்மை பணியாளர்களுக்கு அரசாணை எண் 303ன் படி நிலுவைத் தொகை வழங்க வேண்டும். மாதம் ரூ.250 உயர்த்தி வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 9ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடக்கவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அளித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் செய்திருந்தார்.
Next Story