அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சர் ஆவார்- எதிர்பாருங்கள் என அமைச்சர் மூர்த்தி பேட்டி!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சர் ஆவார்- எதிர்பாருங்கள் என அமைச்சர் மூர்த்தி பேட்டி!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சர் ஆவார்- எதிர்பாருங்கள் என அமைச்சர் மூர்த்தி பேட்டி!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சர் ஆவார்- எதிர்பாருங்கள் என அமைச்சர் மூர்த்தி பேட்டி! மதுரை லேடி டோக் பெருமாட்டி கல்லூரியில் மாவட்ட அளவிலான கல்வி கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன்,மாவட்ட ஆட்சியர் சங்கீதா உட்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி , தொழில் வரியில் ஏய்ப்பு செய்பவர்கள் குறித்த விவரங்களை தொடர்ந்து சேகரித்து வருகிறோம். வரி ஏய்ப்பு செய்பவர்கள் குறித்த விவரங்களை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கிறோம். அவர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த ஜிஎஸ்டி நம்பரில் வரியைப்பு நடக்கிறதோ அந்த எண்களை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம். சர்வே எடுத்து தொழில்வரி 8 செய்பவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து போலியாக தொழில் செய்வதாக சான்று வைத்துக்கொண்டு தொழில் செய்யாதவர்களை கண்டறிந்து வருகிறோம். கடந்த ஆண்டு விட நான்காயிரம் கோடி அதிக வருவாய் வணிகவரித்துறையில் ஈட்டப்பட்டுள்ளது. வணிகவரித்துறையில் ஒரு லட்சத்து 42 ஆயிரம் கோடி இலக்கு வைத்துள்ளோம். தொழில் செய்யும் மக்கள் நியாயமாக நேர்மையாக செய்ய வேண்டும் என்று பேசினார் தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகப் போகிறார் என்று பல்வேறு தகவல்கள் வருகிறதே மேலும் உங்கள் கட்சி அமைச்சர்கள் கூட இது குறித்து பேசி வருகிறார்கள் உங்களுடைய கருத்து என்ன என்று அமைச்சர் மூர்த்தியிடம் கேட்டபோது, உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சர் ஆவார் எதிர்பார்த்து காத்திருங்கள் என அமைச்சர் மூர்த்தி பேசி சென்றார்.
Next Story