வெங்கக்கல்பட்டி பிரிவு அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் இருவர் படுகாயம்.

வெங்கக்கல்பட்டி பிரிவு அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் இருவர் படுகாயம்.
வெங்கக்கல்பட்டி பிரிவு அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் இருவர் படுகாயம். கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, கொசூர் அருகே உள்ள தந்தரிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னன் மகன் தங்கராசு வயது 31. இவரது உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மகன் தவசுமணி வயது 27. இவர்கள் இருவரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி இரவு 8:45 மணி அளவில், கரூர் - திருச்சி சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். இவர்களது வாகனம் வெங்ககல்பட்டி பிரிவு அருகே ஆயுதப்படை காவலர்களின் குடியிருப்பு பகுதிக்கு பின்பகுதியில் உள்ள சாலையில் செல்லும் போது, எதிர் திசையில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, சென்னம்பட்டி அருகே உள்ள பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் வயது 47 என்பவர் ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், தங்கராசு ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தங்கராசுவும் அவருடன் பயணித்த தவசுமணியும் வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில் படுகாயம் ஏற்பட்டது. இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தங்கராசுவை கரூரில் உள்ள நாச்சிமுத்து மருத்துவமனையிலும்,தவசு மணியை செந்தில் கேர் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த தங்கராசுவின் தந்தை பொன்னன் வயது 60 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், கவனக்குறைவாகவும்ஓட்டி விபத்து ஏற்படுத்திய ரவிக்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணிமலை காவல்துறையினர்
Next Story