ஆரம்பநிலை தொழில் முனைவில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கான வாய்ப்புகள் என்னும் தலைப்பில் பயிற்சி பட்டறை
Krishnagiri King 24x7 |29 Aug 2024 10:42 AM GMT
ஆரம்பநிலை தொழில் முனைவில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கான வாய்ப்புகள் என்னும் தலைப்பில் பயிற்சி பட்டறை
ஆரம்பநிலை தொழில் முனைவில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கான வாய்ப்புகள் என்னும் தலைப்பில் பயிற்சி பட்டறை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் மனைவோர் மேம்பாட்டு பிரிவு, பெரியார் பல்கலைக்கழகம் IEDP HUB, IIC குழு மற்றும் முதுகலை மற்றும் ஆய்வியல்ஆங்கிலத் துறையும் இணைந்து "ஆரம்பநிலை தொழில் முனைவில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கான வாய்ப்புகள்" என்னும் தலைப்பில் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இப்பயிற்சி பட்டறையில் ஆங்கிலத் துறையைச் சேர்ந்த இளங்கலை இரண்டாமாண்டு மாணவி அ.அன்சி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இதைத் தொடர்ந்து அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர், முனைவர். சீனி. திருமால்முருகன் அவர்கள் வணிகத்தில் முதலில் மற்ற சந்தை நிறுவனங்களின் முதலீடு, வளர்ச்சி பற்றி தெரிந்திருக்க வேண்டும் மாணவிகளாகிய நீங்கள் அரசு வழங்கும் திட்டங்கள் குறித்தும் தெளிவாக தெரிந்துக்கொண்டு தொழில் முனைவில் ஈடுபட வேண்டும் என்று கூறி தலைமையுரை ஆற்றினார். இதைத்தொடர்ந்து அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் மற்றும் IIC தலைவர் முனைவர் ஷோபா திருமால்முருகன் அவர்கள் மாணவிகளாகிய நீங்கள் உங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அத்தொழிலை செய்தால் மட்டுமே நீங்கள் சிறந்த வணிகராக தொழில்முனைவில் உருவாக முடியும் என்று எடுத்துரைத்து முன்னிலையுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினர் சேலம், அன்னபூர்ணா பொறியியல் கல்லூரி, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை, IIC துணைத்தலைவர் மற்றும் உதவிப்பேராசிரியர் M. ஜெஸ்டின் ஜோசப் அவர்களை ஆங்கிலத்துறையைச் சேர்ந்த இரண்டாமாண்டு மாணவி ப. கௌசல்யா அவர்கள் அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினர் அவர்கள் வணிகத்தில் நீங்கள் வாடிக்கையாளர்களை வென்று லாபகரமான வணிகத்தை உருவாக்க விரும்பினால் உங்கள் தொழிலின் மீது நம்பிக்கை வைத்து முதலில் செயல்படுங்கள். உங்கள் லட்சியம் எதிலும் இரண்டாவதாக இருக்க கூடாது. முன்னோக்கியே இருக்க வேண்டும். ஆரம்பநிலையில் தொழில் முனைவோரிடம் நம்பிக்கை, லட்சியம், விடாமுயற்சி, வேட்கை போன்ற செயல்பாடுகள் இருந்தால் சிறந்த தொழில் முனைவோராக உருவாகலாம் என்று எடுத்துக் கூறி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் வணிகவியல் துறைத் தலைவர் முனைவர். மா.அன்புச்செல்வி, IIC துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் தி.அன்பு அவர்கள் நிகழ்ச்சி சிறப்பாக நடக்க உறுதுணை புரிந்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக ஆங்கிலத்துறை சேர்ந்த இரண்டாமாண்டு மாணவி சா.சுமையா அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பிற துறை உதவி பேராசிரியர்கள் EDC மற்றும் IIC மாணவிகள் பலர் கலந்துக் கொண்டார்கள்.
Next Story