காவிலிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பயிலும் மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி விழா

காவிலிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பயிலும் மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி விழா
காவிலிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பயிலும் மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காவிலி பாளையம் ஊராட்சி காவிலி பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் குழந்தை செல்வங்களுக்கு பள்ளி கல்வித்துறையின் மூலமாக இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்வானது இன்று நடைபெற்றது இந்நிகழ்வில் நமது பவானிசாகர் ஒன்றிய செயலாளர் ( மாதம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவருமான) N.காளியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவச் செல்வங்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கினார். உடன் ஈரோடு வடக்கு மாவட்ட துணை செயலாளர் மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் கீதா நடராஜன் காவிலி பாளையம் ஈஸ்வரன் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பாலு மற்றும் கழக உடன்பிறப்புகளும், தோழமைக் கட்சி தோழர்களும் பொதுமக்களும் உடன் இருந்தனர்
Next Story