கபிலர்மலை,இருக்கூரில் கூட்டுறவு சங்கங்களின் கிளை அலுவலகம் திறப்பு.

பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை,இருக்கூரில் கூட்டுறவு சங்கங்களின் கிளை அலுவலகத்தை மதுரா செந்தில் திறந்து வைத்தார்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த சில மாதங்களுக்கும் முதலமைச்சர் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்களால் சட்டப்பேரவை விதி எண்.110 ன் கீழ் தமிழநாடு முழுவதும் 100 கூட்டுறவுச் சங்கங்களின் கிளைகள் திறக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் நாமக்கல் மண்டலத்தில் 5 கூட்டுறவுச் சங்கங்களின் கிளைகள் திறக்கவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் படி இன்று நாமக்கல் மண்டலத்தில் பரமத்தி வேலூர் வட்டம் கபிலர்மலை வட்டாரத்தில் கபிலக்குறிச்சி வருவாய் கிராமம் கபிலர்மலை பகுதியில் எஸ்.1314 பெரியசோளிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க கிளை கபிலர்மலையில், இருக்கூர் வருவாய் கிராமம் இருக்கூர் பகுதியில் எஸ். 390 பொத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க கிளை இருக்கூரில் திறக்கப்பட்டது. இதில் திட்டக் குழு உறுப்பினர் மதுரா செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில்  நாமக்கல் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு தலைமை வகித்தார். தி.மு.க ஒன்றிய செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். மேலும் திருச்செங்கோடு சரக துணைப்பதிவாளர் பொ.கிருஷ்ணன், துணைப்பதிவாளர் (பயிற்சி) ரா.ஜீவிதா உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
Next Story