வேலூரில் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு.
Paramathi Velur King 24x7 |29 Aug 2024 1:21 PM GMT
வேலூரில் திடக்கழிவு மேலாண்மை குறித்து கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு.
பரமத்தி வேலூர்,ஆக.29: பரமத்தி வேலூர் வட்டம், வேலூர் சிறப்புநிலை பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் வளாகத்தில் சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் குருராஜன் வழிகாட்டுதலின் படி, டாக்டர் டி.வி.எஸ்.ரேவதி கலைக்குழுவினர்கள் மூலம் பொதுமக்களுக்கு திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்து வழங்குதல். வீடுகளில் உரம் தயாரித்தில், பொதுமக்களுக்கு டெங்கு, கரோனா போன்ற நோய் தடுப்பு முன்னெச்சரிக்கைகள், சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் நெகிழி பொருட்களுக்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்துதல், சுற்றுச்சூழல் பேணி பாதுகாத்திடும் வகையில் மழைநீர் சேகரித்தல், வீட்டுக்கு ஒரு மரம் நடுதல் போன்ற நடவடிக்கைகள் மற்றும் வேலூர் பேரூராட்சியின் வளர்ச்சி பணிகளை சிறப்பாக மேம்படுத்திட அனைவரும் வரி செலுத்துவது குறித்தும் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரூராட்சி செயல் அலுவலர் தி.சோமசுந்தரம், பேரூராட்சி மன்ற தலைவர் லட்சுமி முரளி, அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Next Story