விருத்தாசலம் அருகே வாலிபரை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல்
Virudhachalam King 24x7 |29 Aug 2024 3:37 PM GMT
கஞ்சா அடித்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம்
விருத்தாசலம் அருகே உள்ள கார்குடல் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் பிரபாகரன் (44). டிடிஹெச் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மகன் பிரதீப் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் ஆகாஷ் என்பவரும் கஞ்சா அடிப்பதாக பிரபாகரனுக்கு தகவல் கிடைத்து பிரபாகரன் ஆகாஷிடம் சென்று என் மகனை ஏன் கஞ்சா அடிக்க அழைத்து சென்றாய் என கேட்டபோது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இதனை மனதில் வைத்துக்கொண்டு ஆகாஷ் கடந்த 23ஆம் தேதி அன்று பிரபாகரன் வீட்டிற்கு சென்று பிரபாகரனை அசிங்கமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததுடன் கத்தியால் கழுத்தை வெட்ட வந்தபோது பிரபாகரன் கையால் தடுத்ததில் கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு பலத்த காயமடைந்தார். தொடர்ந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரபாகரன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story