குப்பநத்தம் கிராமத்தில் அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி

X
விருத்தாசலம் தெற்கு ஒன்றியம் குப்பநத்தம் கிராமத்தில் அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய செயலாளர் தம்பிதுரை தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் இன்ஜினியர் ரவிச்சந்திரன், வர்த்தக அணி துணை செயலாளர் சக்திவேல், விழுப்புரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வக்கீல் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் அருண்மொழி தேவன் எம்எல்ஏ அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கி பேசினார். இதில் ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர்கள், பலர் கலந்து கொண்டனர்.
Next Story

