ஆதி தமிழர் பேரவையின் மாநில தலைவர் செய்தியாளர் சந்திப்பு
Dindigul King 24x7 |30 Aug 2024 2:20 AM GMT
திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டில் தனியார் தங்கும் விடுதியில் ஆதி தமிழர் பேரவையின் மாநில தலைவர் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது
ஆதித்தமிழர் பேரவையின் மாநில தலைவர் ஜக்கையன் திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு என்பது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி அதை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி அதை பறிக்க நினைத்ததை தடுத்து நிறுத்தியவர் தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலின். உள் இட ஒதுக்கீடு செல்லுபடியாகும் என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது விளிம்பு நிலை மக்களுக்கானதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜாதி வெறியை உருவாக்கும் வகையில் பேசிக் கொண்டிருக்கிறார் தொடர்ந்து ஆதித் தமிழர்களை தமிழர்கள் அல்லாதவர்கள் என சீமான் விமர்சிக்கிறார். மத்திய அமைச்சர் எல் முருகனை பார்த்து தமிழனே அல்லாதவருக்கு ஏன் பதவி கொடுத்தார்கள் என சீமான் கேள்வி எழுப்புகிறார். சீமானின் இந்த பேச்சுக்கு ஆதித்தமிழர் பேரவை சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள் இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார் மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயல்படுகிறார் அவரும் தனது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் அதிமுக ஆட்சிக் காலத்தில் அருந்ததியர் இட ஒதுக்கீடு புறக்கணிக்கப்பட்டது திமுக உள் இட ஒதுக்கீட்டிற்கு வழிவகை செய்ததால் திமுக அரசிற்கு சென்னையில் எங்களது கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்த உள்ளோம் என தெரிவித்தார்.
Next Story