அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் மறியல்!
Pudukkottai King 24x7 |30 Aug 2024 2:25 AM GMT
பொது பிரச்சனைகள்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கறம்பக்குடி அருகேயுள்ள துவார் ஊராட்சி, கிராமத்தில் குடும்பத்தினர் பெத்தாரிப்பட்டி சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு 100 நாள் வேலை, அதற்கான ஊதியத்தை முறையாக வழங்குவதில்லையாம். மேலும், குடிநீர், சாலை உள்ளிட் அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லையாம். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திட முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம். இதனால் அப்பகுதி மக்கள் துவார் பேருந்து நிறுத்த அருகே சாலை ஈடுபட்டனர்.தொடர்ந்து அங்கு சென்ற மழையூர் போலீஸார், ஒன்றிய அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர். மறியலால் புதுக்கோட்டை-கறம்பக்குடி சாலையில் சுமார் 1 மணிநேர போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story