நீர்ல் கரையாத பொருட்களால் ஆன பிள்ளையார் சிலைகளை வைக்கக்கூடாது: ஆட்சியர்!
Pudukkottai King 24x7 |30 Aug 2024 2:30 AM GMT
அரசு செய்திகள்
நீர்நிலைகளில் கரையாத பொருள்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கக் கூடாது என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது: செப். 7-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்காக விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரீஸ், பிளாஸ் தெர்மாகோல் மற்றும் ரசாயனவண்ணங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கக் கூடாது. நீர்நிலைகளில் எளிதில் கரையும் வகையிலான வைக்கோல் போன்றவற்றால் தயாரிக்கப்பட்டு இயற்கை நீர் வண்ணங்கள் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டும் கரைக்க வேண்டும். அதேபோல, முன்கூட்டியே , அரசால் அனுமதிக்கப்பெற்று நீர்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும்.
Next Story