பேருந்து சாவியை எடுத்துவிட்டு ஓடிய போதை ஆசாமி:பயணிகள் தவிப்பு

தூத்துக்குடியில் பேருந்து சாவியை எடுத்துவிட்டு ஓடிய போதை ஆசாமி:பயணிகள் தவிப்பு
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்திலிருந்து வியாழக்கிழமை இரவு தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்வதற்காக தனியார் பேருந்து கிளம்பியது. பேருந்தை நெல்லை மாவட்டம் செவந்தியாபுரத்தை சேர்ந்த பால்பாண்டி என்பவர் இயக்கியுள்ளார் நடத்துனராக நெல்லை மாவட்டம் கூந்தங்குளம் பகுதியைச் சேர்ந்த இசக்கி தாஸ் என்பவர் பணியாற்றியுள்ளார் இந்நிலையில் போதையில் தனியார் பேருந்தில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டை சேர்ந்த லட்சுமணன் என்ற டிரைவர் பேருந்தில் ஏறி உள்ளார். போதையில் எறிய லட்சுமணன் நடத்துனர் இசக்கிதாசிடம் வல்லைநாட்டில் பேருந்து நிற்குமா என்று கேட்டுள்ளார் அதற்கு நடத்துனர் நிற்காது என்று கூறியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நடத்துனர் இசக்கி தாஸ் மற்றும் போதை ஆசாமி லட்சுமணன் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போதை ஆசாமி லட்சுமணன் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்ட நிலையிலும் காது கொடுத்து கேட்காத வகையில் ஆபாச வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பேருந்தை டிரைவர் பால்பாண்டி தெற்கு காவல் நிலையம் அருகே நிறுத்தி போதை ஆசாமி லட்சுமணனை கீழே இறங்க கூறியுள்ளார் அவர் இறங்க மறுக்கவே டிரைவர் பால்பாண்டி மற்றும் நடத்துனர் இசக்கி தாஸ் ஆகியோர் காவல் நிலையம் சென்று காவல்துறையினரை அழைக்க பேருந்தில் இருந்து இறங்கி சென்றுள்ளனர். இதை பயன்படுத்திய போதை ஆசாமி லட்சுமணன் பேருந்தின் சாவியை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி உள்ளார் இதைத் தொடர்ந்து பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் டிரைவர் மற்றும் நடத்துனர் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர் இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து தெற்கு காவல் நிலைய போலீசார் உடனடியாக இருசக்கர வாகன மூலம் சென்று மணி நகர் அருகே பதுங்கி இருந்த போதை ஆசாமி லட்சுமணனை காவல்துறையினர் பிடித்து அவரிடமிருந்த பேருந்தின் சாவியை பறிமுதல் செய்ததுடன் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர் இதைத்தொடர்ந்து சுமார் அரை மணி நேரம் கழித்து பேருந்து பயணிகளுடன் திருநெல்வேலி நோக்கி சென்றது தூத்துக்குடியில் காவல் நிலையம் முன்பு போதை ஆசாமி பேருந்தின் சாவியை எடுத்துக்கொண்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story