விநாயகர் சிலைகள் கரைக்க கலெக்டர் கட்டுப்பாடு:
Thirukoilure King 24x7 |30 Aug 2024 4:17 AM GMT
கட்டுப்பாடு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார் ஆகிய பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியன்று ஊர் பொது இடத்திலும், விநாயகர் கோவிலுக்கு முன்பும் பிரம்மாண்டமான சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவர். பின், ஓரிரு நாட்களில் விநாயகர் சிலைகளை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆறு, குளங்கள், அணைகள், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் விஜர்சனம் செய்வது வழக்கம். விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர். இந்தாண்டு வரும் செப்., 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு, பிரதிஷ்டை மற்றும் கரைப்பது தொடர்பாக கலெக்டர் பிரசாந்த் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story