இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஊழியர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டம்
Dharapuram King 24x7 |30 Aug 2024 4:51 AM GMT
இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஊழியர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டம்
இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஊழியர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டம் மேற்குவங்க பயிற்சி மாணவி மரணம் குறித்து நீதி விசாரனை தேவை என்ற கோரிக்கை வலியுறுத்தி இன்சுரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் மெழுகுவார்த்தி ஏந்தும் போராட்டம் நடைபெற கோவை கோட்ட அகில இந்திய இன்சுரன்ஸ் ஊழியர் துணைக்குழு சார்பில் தாராபுரம் எல்ஐசி கிளை அலுவலக முன்பு மெழுகுவத்தி ஏந்தும் போராட்டம் நடைபெற்றது. தாராபுரம் கிளை அகில இந்திய இன்சுரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மேற்கு வங்க மருத்துவ மாணவி கொடூர கொலைக்கு நீதி விசாரனைகேட்டு இப்போராட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் சங்கசெயலாளர் சிவ பிரகாஷ் நன்றி கூறினார்.
Next Story