அண்ணா சிலை அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பம் நடுவதற்கும், கொடியேற்று விழாவிற்கும் முறையான அனுமதி வேண்டி நகராட்சி ஆணையாளரிடம் மனு

அண்ணா சிலை அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பம் நடுவதற்கும், கொடியேற்று விழாவிற்கும் முறையான அனுமதி வேண்டி நகராட்சி ஆணையாளரிடம் மனு
X
அண்ணா சிலை அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பம் நடுவதற்கும், கொடியேற்று விழாவிற்கும் முறையான அனுமதி வேண்டி நகராட்சி ஆணையாளரிடம் மனு
அண்ணா சிலை அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பம் நடுவதற்கும், கொடியேற்று விழாவிற்கும் முறையான அனுமதி வேண்டி நகராட்சி ஆணையாளரிடம் மனு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழைய நகராட்சி அலுவலகத்திற்கு முன் அண்ணா சிலை அருகில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் புதிதாக கொடி கம்பம் அமைத்து அதில் கொடி ஏற்று விழாவை தொடங்குவதற்காக முறையான அனுமதி பெற வேண்டி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜை சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் யுவராஜ் மகேஷ் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட மகளிர் அணி தலைவரும், கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவருமான செல்வி ரமேஷ் தலைமையில் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து தாராபுரம் நகரத் தலைவர் சார்லி விக்டர், நகரச் செயலாளர் ரமேஷ் ,மகளிர் அணி தலைவர் சந்தனம்மாள் அமுல்ராஜ், நகர இளைஞரணி செயலாளர் அபுதாஹிர், நகர நிர்வாகி பார்த்திபன் , மேற்கு ஒன்றிய தலைவர் கௌதம் ,கிழக்கு ஒன்றிய தலைவர் ராம்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜிடம் முறையாக அனுமதி கூறி மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து தாராபுரம் நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வத்திடமும் முறையாக அனுமதிக்கோரி மனு அளித்தனர். மேலும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சொர்க்கம் ரமேஷ் செய்திருந்தார்.
Next Story