பொறியியல் கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு

பொறியியல் கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு
கருத்தரங்கு
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரியில் ஐ.ஓ.டி., மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்து ஒருநாள் கருத்தரங்கு நடந்தது.கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., நினைவு பொறியியல் கல்லுாரி மின்னியல் - மின்னணுவியல் துறை சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு கல்லுாரி தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.கல்லுாரி மின்னியல் - மின்னணுவியல் துறை தலைவர் அலாவுதீன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சிவக்குமரன் கருத்தரங்கை துவக்கினார். கள்ளக்குறிச்சி ஜிடெக் கம்ப்யூட்டர் எஜூகேஷன் நிறுவன இயக்குனர் ருதுவான், யாசீன், அப்துல்லா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று இணைய உலகம் எனும் ஐ.ஓ.டி., மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் குறித்து கருத்துரைகள் வழங்கினர். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். கல்லுாரி உதவி பேராசிரியை தமிழரசி நன்றி கூறினார்.
Next Story