நெல் சாகுபடி விவசாயிகள் கவனத்திற்கு சம்பா ரகங்கள் ஒரு பார்வை
Dharapuram King 24x7 |30 Aug 2024 4:57 AM GMT
நெல் சாகுபடி விவசாயிகள் கவனத்திற்கு சம்பா ரகங்கள் ஒரு பார்வை
நெல் சாகுபடி விவசாயிகள் கவனத்திற்கு சம்பா ரகங்கள் ஒரு பார்வை திருப்பூர் விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குநர் மணிகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது தற்போது தாராபுரம் தனியார் விதை சுத்தி நிலையங்களில் சம்பா பருவத்திற்கான அரசு சான்று பெற்ற நெல் விதை ரகங்கள் தாராபுரத்திலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில் ரகங்கள் பற்றிய சில தகவல்கள சி -ஆர்-1009(பொன்மணி ), சி -ஆர் -1009 சப் -1 155-160 நாள் வயதுடைய இவை குண்டு ரகத்தை சார்ந்தது ஏக்கருக்கு 2500-2700 கிலோ வரை விளைச்சல் தரக்கூடியது. புகையானுக்கு எதிர்ப்புத்திறன் கொண்ட ஒரு உயர்விளைச்சல் ரகமாகும். ஆடுதுறை -51 155-160 நாட்கள் வயதுடைய நீண்ட சன்ன ரகத்தை சார்ந்தது. ஏக்கருக்கு 2650-2800 கிலோ வரை விளைச்சல் தரும். டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதிகளில் ஆகஸ்ட் மாதம் நாற்று நடுதலுக்கு மிக ஏற்ற ஒரு ரகம். ஐ -ஆர் -20 130-135 நாட்கள் வயதுடைய நடுத்தர சன்ன ரக நெல் வகையை சார்ந்தது. ஏக்கருக்கு 2100-2300 கிலோ வரை விளைச்சல் தரக்கூடியது. தண்டு துளைப்பானுக்கு எதிர்ப்புத்திறன் கொண்ட ரகமாகும். ஆடுதுறை 38,46 இந்த இரண்டு ரகங்களும் 130-135 நாள் வயதுடைய நீண்ட சன்ன ரக நெல் ஏக்கருக்கு 2480-2650 கிலோ வரை விளைச்சல் கொடுக்கும் ரகங்கள் தண்டு துளைப்பான் இலை சுருட்டுப்புழுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது விதை சேமிக்கும் காலம் குறைவு ஆடுதுறை -39 கல்சர் நெல் என்றழைக்கப்படும் இந்த ரகமானது 120-125 நாள் வயதுடையது ஏக்கருக்கு 2000-2200 கிலோ விளைச்சல் தரும் சாப்பாட்டிற்கு ஏற்ற ரகமாகும். குலைநோய் மற்றும் இலை உறை அழுகளுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது திருச்சி -1 135-140 நாட்கள் வயதுடைய இந்த ரகமானது நடுத்தர சன்ன வகையை சார்ந்தது ஏக்கருக்கு 2100-2400 கிலோ வரை விளைச்சல் தரக்கூடியது அவல் மற்றும் பொரி தயாரிப்பிற்கு ஏற்ற ஒரு ரகம். இவ்வாறு உதவி இயக்குநர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story