முன்னாள் முதல்வர் கலைஞரின் வெண்கல சிலை அமைக்க நகர்மன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்
Tiruchengode King 24x7 |30 Aug 2024 6:27 AM GMT
முன்னாள் முதல்வர் கலைஞரின் வெண்கல சிலை அமைக்க நகர்மன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்
திருச்செங்கோடு நகராட்சியின் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தலைமையில் ஆணையாளர் சேகர் முன்னிலையில் நடைபெற்றது கூட்டத்தில் திருச்செங்கோடு நகரின் 33 வார்டுகளின் தேவைகளை கருத்தில் கொண்டு 130 க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவு முன்னிட்டு கலைஞரின் தெருவுகளும் குறித்த 100 ரூபாய் சிறப்பு நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டு கௌரவித்துள்ளது அதற்கு நகர்மன்ற கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. நகராட்சி சார்பில் இயங்கி வரும் அறிவுசார் மையத்தின் நுழைவு வாயிலில் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவாக கலைஞர் அவர்களின் திருவுருவ வெண்கலச் சிலையினை நிறுவிடவும் அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கவும் நகர் மன்றத்தின் மூலம் சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. திருச்செங்கோட்டில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டு 25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்... இன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமையும் இடம் குறித்து அதிமுக நகர் மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தற்போது உத்தேசிக்கப்பட்டிருக்கும் இடம் வெகு தொலைவில் உள்ளதாலும் பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவே வேறு இடத்திற்கு பரிசீலிக்குமாறு கருத்து தெரிவித்தார் புறநகர் பேருந்து நிலையம் இடம் தேர்வு குறித்து பரிசீலனையில் உள்ளது.அனைத்து தரப்பு வணிக மக்களையும் கலந்து ஆலோசித்த பிறகே இடம் குறித்து தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தெரிவித்தார்
Next Story