வேளாண்த்துறையில் பயன்படுத்தும் வாடகை இயந்திரங்களை பார்வையிட்டார் ஆட்சியர் தங்கவேல்.
Karur King 24x7 |30 Aug 2024 6:46 AM GMT
வேளாண்த்துறையில் பயன்படுத்தும் வாடகை இயந்திரங்களை பார்வையிட்டார் ஆட்சியர் தங்கவேல்.
வேளாண்த்துறையில் பயன்படுத்தும் வாடகை இயந்திரங்களை பார்வையிட்டார் ஆட்சியர் தங்கவேல். கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் விவசாயப் பணிகளுக்காக பல்வேறு இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் சொந்தமாக இயந்திரங்களை வைத்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சிறுகுறு விவசாயிகள் இயந்திரங்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். தனியாரிடம் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தும்போது அதிகமாக வாடகை கட்டணம் விவசாயிகள் செலுத்த வேண்டியதை தவிர்ப்பதற்காக, ஏற்கனவே தமிழக அரசு வேளாண் துறை பொறியியல் துறை சார்பாக பல்வேறு இயந்திரங்களை விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் அளித்து வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் வாடகை இயந்திரங்கள் அனைத்தும் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த வாகனங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நேரில் பார்வையிட்டு, இயந்திரங்களின் செயல்பாடு குறித்து அதிகாரிளிடம் விளக்கம் கேட்டு பெற்றார். இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் கந்தராஜா ,வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வேளாண் பொறியியல் துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்களை பார்வையிட்டனர்.
Next Story